பரபரப்பு வீடியோ... கண்களை பிடுங்கி தலித் பெண் பாலியல் பலாத்காரம்... கொடூர கொலையை நினைத்து கதறி அழும் எம்பி... !

 
அவதேஷ் பிரசாத்
 

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பைசாபாத் பகுதி   எம்பி  சமாஜ்வாதி கட்சி அவதேஷ் பிரசாத். இவர்  தலித் பெண்  ஒருவர் கொலை செய்யப்பட்டதை நினைத்து கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்த  வழக்கில் தீர்வு கிடைக்காவிட்டால் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

 அயோத்தியில்  ஜனவரி 31ம் தேதி தலித் பெண்  ஒருவர் காணாமல் போனார். இந்த பெண் உடலில் துணி இல்லாமல் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது  ரத்தக்கறை படிந்த ஆடைகளும் மீட்கப்பட்டன.  அந்த தலித் பெண்ணின் கண்களும் பிடுங்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்பி, என்னை டெல்லிக்கு செல்ல விடுங்கள்.

தலித்

நான் மக்களவைக்கு சென்று பிரதமர் மோடியின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்து செல்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை எனில் கண்டிப்பாக நான் என் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். அன்னை சீதா நீங்கள் எங்கள் எங்கே இருக்கிறார்கள் எனக் கூறியபடியே அவர் கதறி அழுதார். அவரை பிற தலைவர்கள் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  தற்போது வைரலாகி வருகிறது.