நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்.. சுவர் ஏறி எம்பிக்கள் போராட்டம்!

 
நாடாளுமன்றம்


 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 17ம் தேதி அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து   நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று டிசம்பர் 19ம் தேதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றம்
 
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து, அம்பேதகர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாகச் சென்றனர்.

அமித்ஷா

பேரணி மகா திவாரை அடைந்ததும்  நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி சில எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.  பதவி விலக வேண்டும் என  வலியுறுத்தி அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால்  அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.