வைரல் வீடியோ!! 1980 விண்டேஜ் காரை ஓட்டிய MS தோனி!!

 
தோனி

தல தோனிக்கு உலகம் முழுவதும்  வெறித்தனமான ரசிகர்கள் ஏராளம். தோனி சமீபத்தில் டி20 கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 உலகக்கோப்பையை வென்றவர்.  இளம் வீரர்கள்  விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் வரை உருவாக்கிய பெருமைக்குரியவர்.  


 


சர்வதேச கிரிக்கெட்டில் அதிகளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதேபோல வெளியிலும் கால்பந்து போன்றவற்றிலும், பைக், கார் கலெக்ஷன் போன்ற பல்வேறு தளங்களிலும் அவர் சிறந்து காணப்படுகிறார்.

தோனி
கிரிக்கெட் மீதான தோனியின் ஆர்வம் எவ்வளவுக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு பைக், கார்கள் மீது அதிக ஆர்வமும் கொண்டுள்ளார். ஏராளமான பைக்குகள் தனது வீட்டில் வாங்கி குவித்துள்ளார். சமீபத்தில் தோனியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், பைக் கலெக்‌ஷன் தொடர்பான வீடியோ வைரலானது. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான பைக்குகள், 10க்கும் அதிகமான கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த  வீடியோ  அவருக்கு ஆட்டோமொபைல் மீதுள்ள காதலை காட்டுகிறது. பெரும்பாலான தோனி ரசிகர்களுக்கு பைக்குகள் மீதான அவரது காதல் பற்றி ஏற்கனவே தெரியும். அத்துடன்  அவர் கார்களிலும் ஆர்வமாக உள்ளார் மற்றும் ராஞ்சியின் தெருக்களில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸை ஓட்டுவது தான் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web