எம்.எஸ்.சுவாமிநாதன், நரசிம்ம ராவ், சரண் சிங் 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், சரண் சிங் ஆகிய 3 பேருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது பாரத ரத்னா விருது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்சேவை என தேசத்தின் நலனுக்காக மிகச் சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 

tn

எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

tn

இந்நிலையில் முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web