முக முத்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

 
முக முத்து

தமிழகத்தின்   முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து. இவருக்கு வயது 75. இவர் கருணாநிதிக்கும், அவரின் மூத்த மனைவி பத்மாவதிக்கும் பிறந்தவர்.  இவர் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக திரையுலகில் களமிறங்கி, அவரைப் போலவே நடை, உடை, பாவனைகளோடு நடித்து  ரசிகர்களை கவர முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவர் நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’, ‘அணையா விளக்கு’, ‘நம்பிக்கை நட்சத்திரம்’  என பல படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தன. இதனால் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை அதனால்  திரையுலகில் அவரால் நிலைக்க முடியவில்லை.

முக முத்து


தனிப்பட்ட சில காரணங்களால் தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட  மனக்கசப்பு காரணமாக தனித்து வசித்து வந்த மு.க.முத்து, அரசியலில் இருந்தும் விலகியே இருந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதா முதல்வராக   இருந்த காலகட்டத்தில்  அவரை சந்தித்த மு.க முத்து, தனது வறுமையை கூறி உதவி கேட்டார்.   அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெயலலிதா உதவினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சில காலமாக மு.க முத்து எங்கே இருந்தார் என்பது பலரும் அறியாத பதில்  

முக முத்து
இந்நிலையில், கடந்த ஆண்டு மு.க முத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது  தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். மீண்டும் இப்போது வயது மூப்பு காரணமாக மு.க முத்துவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்,  அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மு.க முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web