முல்லைப்பெரியாறு, மேகதாது அணை விவகாரம் - சட்டப்போராட்டம் தொடரும் ஆளுநர் உரை

 
முல்லைப்பெரியாறு  மேகதாது அணை ஆளுநர் உரை முல்லைப்பெரியாறு  மேகதாது அணை ஆளுநர் உரை

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய 17-வது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது குறித்த தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக விளங்கும் முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் விவகாரங்களில் அரசு மேற்கொள்ள உள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் தனது உரையில் விரிவாகக் குறிப்பிட்டார்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் வரலாற்று ரீதியான உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், கேரள அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.  முல்லைப்பெரியாறு அணையின் நீர் வரத்தைத் தடுக்கும் நோக்கிலும், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவைக் குறைக்கும் வகையிலும் கேரள அரசு அங்கு ஒரு புதிய அணையைக் கட்ட முயன்று வருகிறது. இதற்குத் தமிழக அரசு தனது கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்யும்.

ங்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முழுமையாக உயர்த்துவதற்கும், அணையின் மீதான தமிழகத்தின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட முற்படுவது குறித்தும் ஆளுநர் உரையில் முக்கியக் கருத்துக்கள் இடம்பெற்றன.

"காவிரி நீரைப் பெறுவதில் தமிழகத்திற்கு நீடித்து வரும் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முயன்று வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல், மேகதாது பகுதியில் புதிய அணையைக் கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மிக வலுவான சட்டரீதியான போராட்டங்களை மேற்கொள்ளும்."

ங்

தமிழகத்தின் எல்லைப் பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதிலும், அண்டை மாநிலங்களின் அணை கட்டும் திட்டங்களால் தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் தடுப்பதிலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு சட்ட வல்லுநர்களுடன் இணைந்து நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடும் என்று ஆளுநர் அர்லேகர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.