உள்ளாடைக்குள் மெழுகு வடிவில் தங்கம் கடத்தல்! பஹ்ரைனில் இருந்து வந்த 2 பேரிடம் ரூ.2.09 கோடி நகைகள் பறிமுதல்!

 
கடத்தல்

 

பஹ்ரைனில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.2.09 கோடி மதிப்புள்ள 1.68 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

gold worth rs 209 crore seized at mumbai airport from bahrain passengers - Prabhasakshi

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு (AIU) அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர்.

அப்போது, இருவரும் தங்களது உள்ளாடைகளுக்குள் மெழுகு வடிவில் மாற்றப்பட்ட தங்கத் துகள்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 1.68 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Two Passengers Held at Mumbai Airport With Gold Worth Rs 2.09 Crore

அரசு அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் மூலம் சோதனை செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.2.09 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சுங்கச் சட்டத்தின்கீழ் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.