சூப்பர்மேன் உடையில் வலம் வந்த மும்பை வீரர் இஷான் கிஷான்.. கலகலப்பான வீடியோ வைரல்!

 
இஷான் கிஷான்

மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான்  டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக சூப்பர்மேன் உடையில் விமானத்தில் ஏறினர். நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி 20 ஓவரில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த போட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.


இதனையடுத்து மும்பை அணி ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மும்பை அணி நிர்வாகம் தங்களது இணையதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் சூப்பர்மேன் உடையில் ஹோட்டல் அறையிலிருந்து விமான நிலையத்திற்கு சென்றனர்.

இதற்குக் காரணம், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம், டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வரும் வீரர்கள், தண்டனையாக இந்த சூப்பர்மேன் உடையை அணிய வேண்டும் என்ற வேடிக்கையான விதியைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, சமீபத்தில் நடந்த டீம் மீட்டிங்கில் தாமதமாக வந்த இஷான் கிஷான், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா ஆகியோருக்கு சூப்பர்மேன் வேஷம் போடப்பட்டது. ஹோட்டல் அறையில் இருந்து விமானம் வரை கலகலப்பான காட்சிகளை வீரர்கள் தங்கள் இணையதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web