மும்பையில் உயரமான கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
மும்பை

 

மும்பையில் உயரமான கட்டடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்றபோது, நிலைதடுமாறிய தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து பாதுகாப்பு வலையில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் தரையில் விழுவது தவிர்க்கப்பட்டது.

 

வலையில் சிக்கிய தொழிலாளியைக் கண்ட சக ஊழியர், கயிற்றைப் பயன்படுத்தி அவரை மேலே இழுத்து மீட்க முயன்றார். பல மாடிகள் உயரத்தில் நடைபெற்ற இந்த மீட்பு முயற்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும், தொழிலாளி முழுமையாக மீட்கப்பட்டாரா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

 

இந்தச் சம்பவம், உயரமான கட்டடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வலை, பாதுகாப்புப் பட்டை உள்ளிட்ட ஏற்பாடுகள் எவ்வளவு அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.