மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை... இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
மும்பை

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது.  இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில்,  மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் குறிப்பாக தலைநகர் மும்பையில் பேய் மழை பெய்து வருகிறது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி! மேலும் 2 தினங்களுக்கு தொடரும் மழை!

செப்டம்பர் 23ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மும்பை, தானே, பால்கர், நவிமும்பை, முல்லுண்டு, பாண்டுப், நாகூர், காஞ்சூர்மார்க் ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 14 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், விமானப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மும்பை அந்தேரி பகுதியில் நேற்று பெய்த கனமழைக்கு 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.  

அந்தேரி கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் சாலையில் நடந்து சென்ற அந்த பெண் பாதாள சாக்கடைக்குள் அடித்து செல்லப்பட்டார். போலீசார் விரைந்து சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விசாரணையில் அந்த பெண் விமல் அனில் கெய்க்வாட் என்பது தெரியவந்தது. இதுவரையில் மழைக்கு 4 பேர் பலியாகி இருப்பதாகத் தெரிகிறது.  இந்நிலையில், மும்பையில் இன்றும்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவசியம் இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் மும்பை மநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web