மும்பையில் ரேபிடோ ஓட்டுநர் கைது: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பு?

 
ரேபிடோ

 

மும்பையில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது ரேபிடோ ஓட்டுநரை மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

முகமது ஹசன் அபு சர்மத் அக்தர் என அடையாளம் காணப்பட்ட அவர், சமூக வலைதளங்களில் மத மோதலைத் தூண்டும் கருத்துகளைப் பதிவிட்டதாகவும், டெலிகிராம் குழுவில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பேச்சுகளைப் பகிர்ந்ததாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஹிம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்புடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.