ஓடும் ரயில் முன் பாய்ந்த நபர்... உயிரை கையில் பிடித்து ஓடிய இளைஞர்... அதிர்ச்சி வீடியோ!

 
ரயில்

 

மும்பை: ஓடும் மின்சார ரயில் மோதும் அபாயத்தில் இருந்த ஒருவரை, இளைஞர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

மும்பையின் விக்ரோலி ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை நோக்கிச் செல்லும் ஒருவர், எதிரே வேகமாக வரும் ரயிலைக் கவனிக்காமல் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர், உடனடியாக ஓடிச்சென்று அந்த நபரைப் பிடித்து நடைமேடை பக்கம் இழுத்து வருகிறார். ரயில் மிக அருகில் வந்துவிட்ட நிலையிலும், சில நொடிகளில் அவர் மேற்கொண்ட முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அந்த நபர் மீண்டும் தண்டவாளத்தை நோக்கிச் செல்ல முயற்சிப்பது வீடியோவில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட இளைஞர், ரயில் கடந்து செல்லும் வரை விடாமல் தடுத்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இளைஞரின் சமயோசிதமான செயலையும் துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.இருப்பினும், சம்பவம் நடந்த சரியான தேதி, தொடர்புடைய நபர்களின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.