அதிர்ச்சி... போதைப்பொருள்... பிக்பாஸ் பிரபலம் உட்பட 14 பேர் கைது!

 
முனாவர் பரூக்கி

முனாவர் இக்பால் ஃபாருக்கி ஒரு  ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். இவர்  ராப்பர் மற்றும் பாடகரும் கூட . அத்துடன்  ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான லாக் அப் சீசன் 1 ல் வெற்றி பெற்றார். பன்முகத் திறமையாளரான இவர் பிக்பாஸ்சீசன்17ல் கலந்து கொண்டு வெற்றியாளராக அறியப்பட்டவர். இவர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முனாவர் பரூக்கி

சமீபகாலமாக போதைப் பொருட்களின் பயன்பாடு இளசுகளிடையே அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் போதைப்பொருட்களின் பயன்பாடு சராசரியாக 18 வயதுக்கு மேல் என்று இருந்த நிலையில் தற்போது 12 முதல் 13 வயதாக குறைந்திருப்பதாக அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் இந்நிலைமை இன்னும் மோசம். மகாராஷ்டிராவில்  தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது.

முனாவர் பரூக்கி

இந்த பார்லரில்  மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில்  போலீசார் தனிப்படை அமைத்து அந்த பார்லரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், பார்லரில் இருந்த 14 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது.  கைது செய்யப்பட்டவர்களில்  பிக்பாஸ் சீசன் 17-ல் வெற்றி பெற்ற போட்டியாளரான முனாவர் பரூக்கியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜாமீனில் வெளிவர கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றை கொடுத்து விட்டு பரூக்கி விடுவிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web