முரசு புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து!

 
விமானம்

 

வங்கக் கடலில் தீவிரமடைந்துள்ள முரசு புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விமானம் விமான நிலையம்

இதன்படி, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 6 விமானங்களும் என மொத்தம் 11 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ விமானம் திருச்சி

புயல் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை வாயிலாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானச் சேவைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.