“முரசு” புயல் முன்னெச்சரிக்கை... குடிநீர் முதல் பவர் பேங்க் வரை... பொதுமக்களுக்கு அரசு அவசர அறிவுறுத்தல்.. உதவி எண்கள் அறிவிப்பு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

“முரசு” புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடிநீர், அத்தியாவசிய மருந்துகள், அவசரகால விளக்குகள், பவர் பேங்குகள் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். கைபேசிகளை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்னாப் புயல்

மேலும், பாதுகாப்பற்ற கட்டிடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின் கம்பிகளைத் தொடக்கூடாது. புயல் எச்சரிக்கை நிலவும் நேரத்தில் கடலுக்குள் மீன்பிடிக்கவோ, கடற்கரைகள் மற்றும் கடலோரச் சாலைகளுக்குச் செல்லவோ வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

அவசர உதவி தேவைப்படுவோர் மாநில அளவிலான உதவிக்கு 1070 என்ற எண்ணையும், மாவட்ட அளவிலான உதவிக்கு 1077 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். புயல் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.