பிரபல நடிகை மீது கொலை மிரட்டல் வழக்கு ... பரபரக்கும் திரைத்துறை!

தமிழ் திரையுலகில் முண்ணனி குணசித்திர நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவரது வீடு சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் அமைந்துள்ளது. சரண்யா பொன்வண்ணனின் பக்கத்து வீட்டுக்காரார் ஸ்ரீதேவி . இருவரும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கையில் ஸ்ரீதேவி தனது கேட்டை திறந்தபோது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றதால் தகராறு ஏற்பட்டது.
ஸ்ரீதேவியின் வீட்டு கேட் 20 அடி நீளம் கொண்டது. இதனை முழுவதுமாக திறந்த போது சரண்யாவின் கார் அவரது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. வாசலில் நின்ற காரை உரசுவது போல் இரும்புகேட் வேகமாக நகர்ந்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியநிலையில் சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி வீடுபுகுந்து மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில், சரண்யா குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் சரண்யா குடும்பத்தினர் தன்னை வீட்டிற்குள் வந்து மிரட்டிய சிசிடிவி காட்சிகளையும் ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண்யா பொன்வண்ணன் தரப்பிலும் ஸ்ரீதேவி மீது புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!