திருநெல்வேலி நிலத்தகராறில் கொலை... 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

 
கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிலத்தகராறு காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வீரவநல்லூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாகப் பழனிகுமார் (எ) துரைபாண்டி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிகளான மணிகண்டன், உதயகாந்த், வேல்துரை (எ) பார்த்திபன் மற்றும் கோபு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.

IPC 302 (கொலை) - ஆயுள் தண்டனை, IPC 506(i) (மிரட்டல்) - 7 ஆண்டுகள் சிறை, IPC 449 (அத்துமீறி நுழைதல்) - 9 ஆண்டுகள் சிறை என இந்தத் தண்டனைகளை எதிரெதிராக இல்லாமல் ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.