22 வயது இளைஞனை கரம்பிடித்த 37 வயது பெண்... கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசில் தஞ்சம்!

 
kovai kovai

 

பெங்களூருவைச் சேர்ந்த 37 வயதுடைய கவிதா என்ற பெண், தனது முதல் கணவர் மறைந்த நிலையில் 14 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் 22 வயதுடைய பாஸ்கர் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தனது மகனைத் தவிக்க விட்டுவிட்டுக் கவிதா, காதலன் பாஸ்கருடன் மைசூருவிற்குச் சென்று அங்கு ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.

ஆம்புலன்ஸ்

மகளைக் காணவில்லை என்று கவிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கவிதா தனது விருப்பத்தின் பேரிலேயே பாஸ்கரைத் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால் இந்தத் திருமணத்திற்குப் பிறகு தனது மறைந்த கணவரின் உறவினர்களிடமிருந்து தங்களுக்குக் கொலை மிரட்டல் வருவதாகக் கவிதா பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். உறவினர்களின் எதிர்ப்பால் உயிருக்கு அஞ்சி இந்த ஜோடி தற்போது பாதுகாப்பு தேடி அலைந்து வருகிறது.

டெல்லி போலீஸ்

தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரி மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் இன்று தஞ்சம் அடைந்தனர். வயது வித்தியாசம் பாராமல் காதல் திருமணம் செய்த தங்களை வாழ விடாமல் உறவினர்கள் அச்சுறுத்துவதாக அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட போலீசார், புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.