10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கம்... மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

 
போலீஸ் போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மகள் துர்காதேவிக்கும், பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் அழகர்நாயக்கன்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஜெயகணேஷ் உணவகத்தில் சப்ளை மாஸ்டராகவும், துர்காதேவி தனியார் கல்லூரி உணவகத்திலும் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் மனமுடைந்த துர்காதேவி, கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற மனைவியிடம் ஜெயகணேஷ் நேரில் சென்று தகராறு செய்ததோடு, அன்று இரவு அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்துள்ளார். ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் துர்காதேவியை உடல் முழுவதும் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மாமனாரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி- மருமகன் வெறிச்செயல்..!!

துர்காதேவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவர் ஜெயகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.