மனைவி தற்கொலைக்கு வக்கீல் காரணமா? அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல்!

 
nellai nellai

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கடம்போடுவாழ்வைச் சேர்ந்த பூலுடையார் என்ற பாண்டி (35) நெல்லை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிவராமமங்களத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தியாகராஜநகரில் வசித்து வந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 3-ம் தேதி தம்பதியிடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த ராஜலெட்சுமி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

ராஜலெட்சுமியின் மரணத்திற்கு அவரது கணவர் பூலுடையாரே காரணம் என்று அவரது உறவினரான அருணாசல ராஜா (30) ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் பூலுடையார் கடம்போடுவாழ்வில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். நேற்று மதியம் அவர் வீட்டில் இருந்தபோது, அருணாசல ராஜா உட்பட 3 பேர் திடீரென அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்து அவரைத் தாக்க முயன்றனர்.

ஆயுதங்களுடன் வந்த கும்பலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூலுடையார், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டின் பின்புறம் வழியாகத் தப்பி ஓடினார். எனினும் அந்த மூவரும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்புவதற்காகப் பூலுடையார் வேகமாக ஓடியபோது, எதிர்பாராதவிதமாகத் தெருவில் கிடந்த கல் தட்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.