கொடூரம்... 9 மாதக் குழந்தையை அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தம்பதி!

 
ம்துரை ம்துரை

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரின் மனைவி கலைச்செல்விக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கள்ளத்தொடர்பு காரணமாக கலைச்செல்விக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை ஏற்க மறுத்த கணவனுக்கும் கலைச்செல்விக்கும் இடையே பெயர் வைப்பதில் தொடர்ந்து குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது.

 குழந்தை
இந்த நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி குழந்தை திடீரென இறந்துவிட்டதாகக் கூறி வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைத்து நாடகமாடியுள்ளனர். இவர்களின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வட்டார மருத்துவர் விஸ்வநாதபிரபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் காவல் துறையினர் தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் விசாரணையில் கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக அண்டா தண்ணீரில் ஒன்பது மாதக் குழந்தையை மூழ்கடித்து கலைச்செல்வி கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த நிலையில், கொலைக் குற்றத்திற்காக பாண்டித்துரை மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.