உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் அடித்துக்கொலை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி காமாட்சிக்கு 28 வயதாகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 64 வயதான முதியவர் மகேந்திரனுக்கும் இடையே கடந்த சில காலமாகப் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகப் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்தப் பழக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், ஒரு மாதத்திற்கு முன்பு காமாட்சியை உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் ஆத்திரமடைந்த காமாட்சி, முதியவர் மகேந்திரனைச் செருப்பால் அடித்து அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த மகேந்திரன், வீட்டின் அருகே தனியாக இருந்த காமாட்சியைத் தேடிச் சென்று பயங்கரமாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி மகேந்திரனை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
