உயிருக்குப் போராடிய கணவர், மகனின் அருகே அமர்ந்து செல்போன் பார்த்த பெண் மருத்துவர்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
டாக்டர்

 

கர்நாடக மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழகச் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயக்க மருந்து நிபுணரான கிரண் ஹொன்னண்ணவர் மற்றும் அவரது மனைவி கண் மருத்துவர் பிரியா ஆகியோர் வசித்து வந்தனர். இந்தத் தம்பதியருக்கு 10 வயதுடைய நிகித் உட்பட 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் உறவினர்கள் பிரியாவை போனில் தொடர்பு கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று   பார்த்தனர்.

அப்போது வீட்டின் ஒரு அறையில் கிரண் கத்தியால் குத்தப்பட்டுக் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு உறவினர்கள்   அதிர்ச்சியடைந்தனர். மேலும் மற்றொரு அறையில் பிரியா எவ்வித சலனமுமின்றிப் படுக்கையில் படுத்துக் கொண்டு தனது செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மிக அருகிலேயே 10 வயது மகன் நிகித் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிருக்கு  போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு உறவினர்கள் அலறியடித்துப் போலீசாருக்கு முறைப்படி தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தார்வார் போலீசார், உயிருக்குப்போராடிய சிறுவன் நிகித்தை மீட்டுச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாகப் பிரியா தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தனது மகனையும் கொடூரமாகக் குத்தியது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கும் நிலையில், பிரியாவை உடனடியாகக் கைது செய்து கொலைக்கான   காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.