குழம்பு செய்யாததால் ஆத்திரம்... மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவர் !
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வந்தூர் பகுதியில் மதுபோதையில் இருந்த கணவன், சாப்பாட்டுக்குக் குழம்பு செய்யவில்லை என்று கூறி மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தூரைச் சேர்ந்த ரஷீத் என்பவர் தனது மனைவி ஃபசீலாவிடம் (38) சாப்பாட்டுக்கு ஏன் குழம்பு செய்யவில்லை எனக் கேட்டுச் சண்டையிட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரஷீத் ஃபசீலாவை கத்தியால் குத்தியுள்ளார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் ரஷீதைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
