தண்ணீர் வராததால் ஆத்திரம்... பஞ்சாயத்து முன்னாள் தலைவர் செங்கல்லால் அடித்தே கொலை!
Sep 5, 2026, 19:30 IST
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தாமரைக் குளத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகாராஜன் என்பவர் செங்கலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தனது வீட்டுக்கு தண்ணீர் வரவில்லை என்று கூறி இசக்கியப்பன் என்பவர் மகாராஜனின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த இசக்கியப்பன் அங்கு கிடந்த செங்கலை எடுத்து மகாராஜன் மீது வீசியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
