பழங்கால முருகன் சிலை கண்டெடுப்பு.. வியப்பில் பொதுமக்கள்!

 
முருகன் சிலை

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்றரை அடி உயரமுள்ள முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை வருவாய்த்துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பாகசாலை கிராமம் அருகே உள்ளது கொசஸ்தலை ஆற்றங்கரை. இந்நிலையில் இன்று வழக்கம் போல் அப்பகுதி குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூன்றரை அடி உயரமுள்ள முருகன் சிலை இருப்பதை கண்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் உடனடியாக சிலைக்கு விரைந்து வந்து மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் இருந்து சிலையை மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருத்தணி பகசாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web