இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மகன் காலமானார் !

 
காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். இவரின் மறைவு கட்சித் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவத் துறையில் பல சேவைகளைச் செய்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகின்றது.

செல்வப் பெருந்தகை

அவரது மறைவுக்குத் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தனது அனுதாபங்களை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் காதர் மொய்தீன் குடும்பத்தினருக்குத் தன் ஆறுதலைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். துயரமான இந்தச் சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பேராசிரியர் காதர் மொகிதீன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். மறைந்த மருத்துவர் கலீலூர் ரஹ்மானின் இறுதிச் சடங்குகள் மற்றும் விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.