பிக்பாஸ் 8... ’எறங்கி அடி முத்து’ ... டபுள் எவிக்‌ஷனில் கதறி அழுத முத்துக்குமரன்!

 
பிக்பாஸ் 8

 பிக் பாஸ் 8 வது சீசனில் நேற்று தான்  முதல்முறையாக  டபுள் எவிக்ஷன் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் ரொம்ப கூட்டமாக இருக்கிறது என்று சொல்லி ஆர்.ஜே. ஆனந்தியையும், சாச்சனாவையும் பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார்.  சாச்சனாவுக்கு இரண்டாவது எவிக்ஷன் ஆகும். முதலில் நிகழ்ச்சி தொடங்கிய அதே நாளில் சாச்சனாவை வெளியேற்றினார் பிக்பாஸ் . அந்த புள்ளய பத்தி கொஞ்சம் கூட தெரிந்து கொள்வதற்குள் வெளியேற்றியது நியாயம் இல்லை என பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிக்பாஸ் வெளியேற்றிய வேகத்தில் சாச்சனாவை திரும்ப அழைத்து வந்தார்.

சாச்சனா

இந்நிலையில் இந்த முறை நிரந்தரமாக வெளியேற்றப்பட்டு இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சாச்சனாவுக்கும், முத்துக்குமரன் அண்ணாவுக்கும் இடையே பாசமாக இருந்தது. தங்கை சாச்சனாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு வந்தார் முத்து. தான் ஊட்டி வளர்த்த தங்கச்சிமா வெளியேற்றப்பட்டதை பார்த்த முத்துவுக்கு அழுகையே வந்துவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து  62 நாட்களாக கல்லு மாதிரி இருந்த மனுஷன் நேற்று தங்கச்சிமா கிளம்பியதை பார்த்து கண்ணில் தண்ணீர் விட்டு கதறி அழுதார்.  

அதை பார்த்து முத்துக்குமரன் ஆர்மிக்கும் கண்ணீர் வந்துவிட்டது. பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதில் இருந்து நேற்று தான் முதல் முறையாக அழுதுள்ளார்  முத்துக்குமரன். சாச்சனா கிளம்பும்போது யாரும் அழ மாட்டார்கள் என நினைத்திருந்த நிலையில் முத்து, தர்ஷிகா என ஆளாளுக்கு கண் கலங்கிவிட்டனர்.  

பிக்பாஸ் 8 அப்டேட்ஸ் | முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்... இந்த சீசனின் காதல் ஜோடி யார்?
அந்த அழுகாச்சியை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் கண்ணில் வியர்த்துவிட்டது. சாச்சனா கிளம்பும்போது பெரிய மனுஷி மாதிரி முத்துக்குமரனுக்கு அறிவுரை வழங்கினார். ஜெயிக்கணும் முத்து ஜெயிக்கணும். நிறைய பிளே பண்ணு முத்து, கம்மியாகாத, விளையாடு என அறிவுரை வழங்கினார் சாச்சனா. அதை பார்த்த முத்துக்குமரன் ஆதரவாளர்களோ, நாங்கள் முத்துவிடம் சொல்ல நினைத்ததை சாச்சனா சொல்லிவிட்டார் என்கின்றனர்.  முத்துக்குமரனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கப் போவதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் சாச்சனா. நேற்று பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் முதல் முறையாக  டபுள் எவிக்ஷன், இன்னொன்று முத்துக்குமரன் அழுதது என 2 விஷயங்கள் அரங்கேறியுள்ளன.

 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!