"உடல்ரீதியா பயன்படுத்திய முத்துக்குமரன் தாலி கட்டியே ஆகணும்" - இன்ஸ்டா பெண் தொடர் போராட்டம்... மீண்டும் பரபரப்பு புகார்!

 
முத்துக்குமரன் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி, இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகாரை அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் தமக்கு அறிமுகமான முத்துக்குமரன், முதலில் தாமே தமக்குச் குறுஞ்செய்தி அனுப்பியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் சென்னை கத்திபாரா சந்திப்புப் பகுதியில் நேரில் சந்தித்துக் கொண்டதாகவும், அதன்பின் முத்துக்குமரன் தன்னைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் முத்துக்குமரன் வஹிதா

தன்னிடம் காதலை வெளிப்படுத்தியதுடன், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி முத்துக்குமரன் தன்னை ஏமாற்றியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். "உன்னை விட மனசேயில்லை, உன்னைப் பார்க்கணும் போல இருக்குனு என் வீட்டு வாசல்ல வந்து நின்னாரு.. என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டு என்னைக் குடிக்க வச்சாரு.. என்கிட்ட மைண்ட் கேம் பிளே பண்ணாரு" என்று அவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு, தற்போது ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், முத்துக்குமரன் தமக்குத் தாலி கட்டியே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "எனக்கு அதைக் கொடுக்கலனா, அவர் 10 வருஷம் கம்பி எண்ணட்டும்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

பிக்பாஸ் முத்துக்குமரன்

பிரபல பிக்பாஸ் பிரபலம் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள இந்தச் புகாரும், அவர் ஊடகங்கள் முன்பு வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.