பகீர்... கறி சமைப்பதில் தகராறு... மகனை அடித்தே கொலை செய்த தாய்... !

 
மகாராஷ்டிரா

 

மகாராஷ்டிராவில் கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சொந்த மகனையே தாய் கொலை செய்துள்ள சம்பவம்   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட சாதாரணப் பிரச்சனை காரணமாக ஆத்திரமடைந்த தாய் தனது இளம் மகனைத் தீர்த்துக்கட்டியதாகக் காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.   தகவல் கிடைக்கப்பெற்ற காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

வீட்டில் சமையல் செய்வது தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் ஏற்பட்ட கடும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத தாய் தனது சொந்த மகனை அடித்துக் கொன்றதாகக் கூறப்பட்டு வருகிறது. மகனின் உயிரைப் பறித்த பிறகு பதற்றமடைந்த தாய் அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு இக்கொலைக்கான முழு உண்மைகளையும் வெளிக்கொணர முயன்று வருகின்றனர்.

பெற்ற தாயே தன் கைகளால் மகனைக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் உறவினர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சிறிய விஷயத்திற்காகக் குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் ஒரு உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.