விடுதி அறையில் எம்பிபிஎஸ் மாணவி சடலமாக மீட்பு!

 
மருத்துவ மாணவி

 

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில், 24 வயது எம்பிபிஎஸ் மாணவி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த ஷகுன் சைனி, முசாபர்நகரில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 19-ம் தேதி மாலை, அவர் தங்கியிருந்த விடுதி அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் எழுந்தது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஷகுன் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மாணவியின் மரணத்துக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து அறைத் தோழி தெரிவித்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக உள்ளூர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், அந்தத் தகவலுக்கும் மரணத்துக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.