"மனம் கனக்கிறது!" - விருதுநகர் வெடிவிபத்தில் 20 பேர் பலி: ஸ்பாட்டுக்கு விரையும் அமைச்சர்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான அறிக்கை!

 
ஸ்டாலின் திமுக ஸ்டாலின் திமுக

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்," என்று பதிவிட்டுள்ளார்.


விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், முதல்வர் உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறவும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், காயமடைந்தவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிப்பதையும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைப்பதையும் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வெடிவிபத்து

10 கி.மீ தூரத்திற்கு அதிர்வை ஏற்படுத்திய இந்த வெடி விபத்தால் 18 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.