"கர்நாடக வனத்துறையில் என் உயிருக்கு ஆபத்து உள்ளது" - துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தமிழர் பகிரங்கக் குற்றச்சாட்டு!

 
தமிழர்கள்

கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகிமைதாசன் என்ற தமிழர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள்

3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கியச் சாட்சியான தன்னை, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பலவந்தமாகக் கைது செய்ய முயல்வதாக மகிமைதாசன் குற்றம் சாட்டியுள்ளார். காயங்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில், மருத்துவமனையிலிருந்து உடனடியாக 'டிஸ்சார்ஜ்' ஆகுமாறு அதிகாரிகள் தன்னை நெருக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நேரடியாகக் காயமடைந்து உயிர் தப்பிய ஒரே நபரான தன்னை வழக்கில் இருந்து விலக்கவே வனத்துறையினர் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்நாடக வனத்துறை தமிழர்கள் கொலை

கர்நாடக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனப் பயந்துள்ள அவர், தமக்கு உரிய பாதுகாப்பும் நீதி நியாயமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.