“தமிழ் மொழி மீதான எனது அன்பு மேலும் பெருகியுள்ளது” - பள்ளி விழாவில் பிரதமர் மோடி உரை!

 
மோடி

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, காலங்கள் கடந்து செல்லச் செல்ல தமிழ் மொழி மீதான தனது அன்பு மேலும் பன்மடங்கு பெருகியுள்ளது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அதன் உன்னத சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் தூதர்களாக விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.