"எனது 6 வயதில் என் அம்மா தற்கொலை செய்துக் கொண்டார்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்!

 
ஆதவ்

சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது சிறுவயது நினைவுகளையும் விவசாய குடும்பப் பின்னணியையும் பகிர்ந்துகொண்டு உருக்கமாகப் பேசினார்.

"எனது அம்மா ஒரு விவசாயி. எனக்கு 6 வயதாக இருந்தபோதே அவர் தற்கொலை செய்து கொண்டார்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பை நினைவுகூர்ந்து கூறினார்.

ஆதவ் அர்ஜுனா

தனது தாயின் விவசாயப் பின்னணி காரணமாக, விவசாயிகளின் வாழ்க்கையில் நிலவும் சிரமங்களையும் சவால்களையும் தான் நேரடியாக உணர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் வேதனையைத் தனது சொந்த வாழ்க்க அனுபவத்தோடு ஒப்பிட்டு அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.