தினமும் குடி போதையில் வந்த மகன்.. ஆத்திரம் தாங்க முடியாத தாய் கோடாலியால் வெட்டி படுகொலை..!

 
மகனை கொலை செய்த தாய்
 குடித்து விட்டு டார்ச்சர் செய்த மகனை கோடாலியால் அடித்துக் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி (68). அவரது மகன் அனு தேவன் (45). கூலித் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயை அடித்து உதைப்பது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

Mundakkayam Mother Killed Son: മദ്യപിച്ച് ബഹളം പതിവ്; ശല്യം  സഹിക്കവയ്യാതെയാണ് മകനെ വെട്ടിക്കൊന്നതെന്ന് അമ്മ - kottayam news mother  statement on incident against son at mundakayam ...

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அனு தேவனை தலையில் பலத்த காயத்துடன் சாவித்திரி கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக டாக்டரிடம் கூறினார். சிகிச்சை பலனின்றி அனு தேவன் இறந்தார். இந்தநிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக முண்டக்கயம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

Death of 45-year-old man in Mundakkayam murder; The mother beat her son to  death with an ax for always coming home drunk and fighting; Mother in  police custody

அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அனு தேவனை தாய் சாவித்திரி கோடாலியால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது மகனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தினமும் குடித்துவிட்டு துன்புறுத்தி வந்ததால் மகனை கொலை செய்ததாக அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பின் சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.

From around the web