ஆதரவாளர்களுடன் போராட்டம்.. MY V3 ADS நிறுவனர் அதிரடியாக கைது..!

 
MY V3 ADS

MY V3 ADS என்ற நிறுவனத்தை கோயம்புத்தூரில் உள்ள சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வந்தார்.   தினமும் YouTube -இல் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதி நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

பணம் வரலை.. அடுத்த சிக்கல்.. கோவை my v3 ads நிறுவனம் மீது அடுத்தடுத்து 2  புதிய புகார்கள் | 2 new complaints from investors on my v3 ads company in  Coimbatore - Tamil Oneindia

360 ரூபாய் முதல் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு பிரிவுகளில் செலுத்தி உறுப்பினராகலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்த்து 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப ஆயுர்வேத காப்ஸ்யூல்கள் வழங்கப்படும், மேலும் புதிதாக பணியமர்த்தப்படுபவர்களுக்கு தனி கட்டணம் வழங்கப்படும் என்று விதிமுறைகள் உள்ளது.

இந்த நிலையில் தான், கோவை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் முத்து, மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்குவது சட்ட விரோதம் என்றும், தினசரி விளம்பரம் பார்த்து அதிக வருமானம் பார்ப்பது போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றி பெரும் பணம் வசூலிக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார். புகாரின் பேரில், அந்த நிறுவனம் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sakthi Anandan

இந்நிலையில்,MY V3 ADS நிறுவனத்தை அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்து MY V3 ADS ஏடிஎஸ் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் கலந்து கொண்ட சக்திஆனந்தன் உள்பட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web