"மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறார் என் மனைவி... நான் எங்கே போறது?" - நடிகர் சரவணன்
இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சட்டமும் நீதியும் 2' வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சரவணன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கவலைகளைப் பகிர்ந்துள்ளார்.
'சட்டமும் நீதியும் 2' தொடர் வருகிற 23-ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் நிலையில், பாலாஜி இயக்கத்தில் நடிப்பது தனக்குக் கிடைத்த பெரும்பேறு என்றும், முதல் சீசனைப் போலவே இதுவும் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரவணன், தனது வாழ்க்கையிலேயே தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தன் மனைவியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், "மாதம் ரூ.1.5 லட்சம் கேட்கிறாள் என் பொண்டாட்டி. நானே வேலை இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இதில் இவ்வளவு பணம் கொடுத்துவிட்டு நான் எங்கே போவது?" என்று வருத்தமுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.
