மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி... பாஜக பிரமுகர் தேவநாதன் சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு!
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி இருக்கும் பாஜக பிரமுகர் தேவநாதன் யாதவ் சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கல் ரூபாய் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து இந்த முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனம், நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் தேவநாதன் யாதவ் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமை நாதன் மற்றும் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கக்கோரி தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் நல சங்க தலைவர் எம்.சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தனது மனுவில், தேவநாதன் யாதவின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ததில் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் மோசடி செய்ததை வைத்து ஆதாயம் அடைந்தததாக கருதுவதாகவும், அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனால், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் தங்கள் சொத்துக்களை விற்கக் கூடும் என்பதால் அவர்களின் சொத்துக்களை முடக்கக்கோரி உள்துறை செயலாளரிடம் அளித்திருந்த தனது மனு பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் மற்றும் மகிமை நாதன் மற்றும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனம் உள்ளிட்டோரின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க அரசுக்கு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
