ரஷ்ய பெண்ணை மணந்த மயிலாப்பூர் வாலிபர்... திருச்செந்தூர் கோவிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்!

 
சீனா பாரம்பரிய திருமணம்

சீனாவில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞரும், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யுவதியும் காதலித்துத் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்பவர் சீனாவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரஷ்யாவைச் சேர்ந்த மரியா என்பவருடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்தது.

இருவீட்டாரின் ஒப்புதலும் சம்மதமும் பெற்றதைத் தொடர்ந்து, இவர்களது திருமணம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தமிழ் கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் முறைப்படி பாரம்பரிய பட்டுப்புடவை அணிந்து மணமேடை ஏறிய மரியா, தனது பெயரை 'கீர்த்தனா' என்றும் மாற்றிக் கொண்டு தமிழ் பாரம்பரியப் பண்பாட்டின்படி வாழ்வைத் தொடங்கியுள்ளார்.