பழமையான கோயில் கருவறையை ஜேசிபி கொண்டு தோண்டிய கொடூரம்... புதையலைத் தேடி மர்ம நபர்கள் அட்டூழியம்!

 
பீரப்பன் கோவில்

கர்நாடக மாநிலத்தில், விஜயநகர், ஹோஷ்பேட் தாலுகாவில் தர்மசாகர் கிராமத்தில் உள்ள பழைமையான பீரப்பன் கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணையை ஒட்டி இருந்து வருகிறது. பழமையான இந்த கோவிலுக்கு வழக்கம் போல பூஜைகளை செய்வதற்கு சென்றிருந்த பூசாரி அதிர்ச்சியடைந்தார். 

கோயிலின் கருவறை பகுதியின் முன்பகுதி முழுவதுமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு, பெரிய அளவில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். கோவிலின் கருவறை பகுதியில் சுமார் பத்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் உடனடியாக கிராமத்திருக்குப் பரவியதையடுத்து, சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த பகுதியில் கோயிலின் அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதையலுக்காக தோண்டப்பட்ட கோவில் கருவறை பகுதியில் எலுமிச்சை, குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் சிதறிக் கிடந்தன. கோவிலின் கருவறையில் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தோண்டியதில் மாந்திரீகம் நடந்தது தெரிய வந்தது.

ஆனால் கோயிலின் கருவறையை தோண்டிய போது எதுவும் கிடைக்காததால் கோயிலின் முன்புறம் இருந்த கல்லை அகற்றி தேடினர். பீரப்பன் கோவிலில் புதையல் தேட வந்தவர்கள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டவர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பழமையான கோவிலை தோண்டி அழித்தவர்களை தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விஜயநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web