டெல்லியில் பதற்றம்... மர்ம பொருள் வெடித்து விபத்து!
தலைநகர் டெல்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் மர்மபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஒரு பக்கம் காற்று மாசு காரணமாக மக்கள் அவதியுற்று வரும் நிலையில், மறுபுறம் டெல்லியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். வீடு புகுந்து கொலை, கொள்ளை, துப்பாக்கி கலாச்சாரம் என்று நாளுக்குநாள் டெல்லியில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
VIDEO | Explosion reported in Prashant Vihar area of #Delhi. Fire tenders reach the spot. More details awaited.
— Press Trust of India (@PTI_News) November 28, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/Rchohvl1vY
இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் பகுதியின் அருகிலேயே பிரசாந்த் விஹார் பகுதியில் மர்ம பொருள் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளிலும் பெரும் அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்தில் குவிந்து ஆய்வு செய்து வருகின்றனா். இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் பிரதமர் உள்பட முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் என பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், தலைநகரில் மர்ம பொருள் வெடித்து சிதறியது டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!