காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது... செல்வப்பெருந்தகை பேட்டி!

 
ஜெயக்குமார்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்ததால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை விவகாரத்தில் தடயங்கள் கிடைக்காததால், குற்றவாளிகளை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

செல்வப்பெருந்தகை

நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "நடிகை கஸ்தூரியின் பேச்சு தொடர்பான ஆதாரங்கள் தெளிவாக இருந்தன. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.ஜெயக்குமாரின் கொலை வழக்கில், குற்றவாளிகள் யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

கொலை

அதற்கு போதிய சிசிடிவி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த கொலையை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். நமது திறமையான காவல்துறையினர் குற்றவாளிகளை நிச்சயம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் விசாரணையை தொடரட்டும். புலன் விசாரணையில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது." என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web