மைசூர் தசரா விழா இன்று தொடக்கம் - மடாதிபதி கவி சித்தேஸ்வரா சுவாமி தொடங்கி வைக்கிறார்!

 
மைசூர் தசரா

கர்நாடக மாநிலத்தின் மிக முக்கியப் பாரம்பரிய அடையாளமான உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று சாமுண்டி மலையில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி திருக்கோயிலில் இன்று காலை 11.50 மணி முதல் 12.13 மணிக்குள் அமையும் சுபவேளையான தனுஷ் லக்கனத்தில் தசரா விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

இன்று மைசூரு தசரா விழா தொடக்கம்!

சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளித் தேரில் எழுந்தருளும் மங்களகரமான வேளையில், கவி மடத்தின் மடாதிபதி கவி சித்தேஸ்வரா சுவாமி அம்மன் மீது மலர்களைத் தூவி விழாவைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மைசூரு தசரா

அடுத்தடுத்து வரும் நாட்களில் அரண்மனை மின் அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ்பெற்ற ஜம்போ சவாரி (அம்பாரி யானை ஊர்வலம்) என கர்நாடகா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதால், நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் மைசூரில் குவிந்து வருகின்றனர்.