நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா கோவையில் கைது!

 
கார்த்திகா

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளரும், அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளருமான கார்த்திகா கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தல் நாதக கார்த்திகா

கடந்த தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தின்போது, அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் சென்ற பாதையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி கார்த்திகா மற்றும் நாதக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தரப்பில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளின் அடிப்படையில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் கார்த்திகாவைத் தற்போது காவல்துறையினர் கோவையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேர்தல் நேரப் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வழக்குத் தொடர்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.