நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 20-ல் உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!

 
நாகை

 

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 20-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகூர் கந்தூரி விழா: நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 20-ல் விடுமுறை

இந்த விடுமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், டிசம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 5-ம் தேதி செயல்படும்.