வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றத்தில் ஹீலியம் பலூன்கள் வெடித்து தீவிபத்து... பெரும் பரபரப்பு!

 
வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவில் ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழாக் கொடியேற்ற நிகழ்வின் போது திடீரென ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறின. வாணவேடிக்கையின் போது பறந்து வந்த தீப்பொறி பலூன்கள் மீது விழுந்ததால் இந்த விபத்து நேரிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் கூட்டத்தில் நின்ற யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாத் தொடங்கிய காலகட்டத்தில் நிகழ்ந்த இந்தச் எதிர்பாராத விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.