பழச் சந்தையில் 2 வியாபாரிகள் அடித்தே கொலை... பெரும் பரபரப்பு!

 
நாக்பூர் நாக்பூர்

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள புதவார் பஜார் (சோம்வாரிபேத்) சந்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் பார்ப்போர் நெஞ்சை நடுங்க வைக்கும் ஒரு அநாகரிக இரட்டைக்கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பஜ்ரங் நகர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சோனு போட்வே (25) மற்றும் ஆதித்யா ராகுல்கர் ஆகிய இரு இளைஞர்கள் அந்தப் பகுதியில் தங்கிப் பழ வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

இவர்களுக்கும், இவர்களிடம் வேலை பார்த்து வந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பழக்கடையில் ஏற்பட்ட ஒரு சிறிய கூலித் தகராறு மற்றும் பழைய பகை காரணமாகக் கடந்த சில நாட்களாகவே கடுமையான வாக்குவாதம் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இந்த விவகாரம் எல்லை மீறிப் பெரிய கலவரமாக வெடித்தது. ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு கும்பல், அந்த இரு பழ வியாபாரிகளையும் பொதுச்சாலையில் வைத்துச் சரமாரியாகத் தாக்கியதோடு, அருகில் கிடந்த பெரிய பாராங்கற்களைத் தூக்கி அவர்களின் தலையில் போட்டு மிகக் கொடூரமான முறையில் நசுக்கிக் கொலை செய்தது.

இரட்டைக்கொலை குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த நாக்பூர் குற்றப்பிரிவு போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இரு வியாபாரிகளின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், விஹிர்கான் பகுதியில் உள்ள ஒரு நாலா அருகே பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளிகளான வைபவ் डोंगரே, வேதாந்த் தபீர் மற்றும் அபிஷேக் ராவத் ஆகிய 3 பேரை  கைது செய்துள்ளனர்