பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!
திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லாத நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
