காலியாகும் நாதக கூடாரம்... கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியில் தலைவர் சீமானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன், சீமானின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிருப்தியை தருவதாக தெரிவித்துள்ளார். அருந்ததியர் சமூகத்தினர் குறித்த சீமானின் பேச்சு களத்தில் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!